ஹொரணை அரச வங்கி கொள்ளைக்கு காரணம் என்ன..?
ஹொரணை நகரில் அரச வங்கியொன்றில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கைதான வங்கியின் உதவி முகாமையாளர் பல பெண்களுடன் தொடர்பு பேணியதாகவும், இதனால் அதிகளவு கடன் பட்டிருந்தார் எனவும் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
சுமார் மூன்றரை கோடி ரூபா பணம் இவ்வாறு கொள்ளையிடப்பட்டிருந்தது. கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் பணத்தில் ஒரு தொகுதி பணம் வங்கியிலேயே மறைத்து வைக்கப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
கொள்ளையிடப்பட்ட சந்தர்ப்பத்தில் வங்கியின் சீ.சீ.ரீ.வி கட்டமைப்பினை குறித்த உதவி முகாமையாளர் செயலிழக்கச் செய்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Post a Comment