மிரட்டல் செய்திகளுக்கு பயந்து ஏமாற வேண்டாம்
பொலிஸ் அதிகாரிகளைப் போல போலியான வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் கணக்குகளை உருவாக்கி, மக்களிடம் பணம் பறிக்கும் புதிய வகை மோசடி குறித்து கணனி அவசர பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோசடிக்காரர்கள் பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்கள் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி போலியான கணக்குகளை உருவாக்குகின்றனர். பின்னர், அந்த கணக்குகள் மூலமாக மக்களை தொலைபேசி அழைப்புகள், வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் டெலிகிராம் சாட்கள் மூலம் தொடர்பு கொள்கின்றனர்.
அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து வரும் மிரட்டல் செய்திகளுக்கு பயந்து ஏமாற வேண்டாம் என கணனி அவசர பதிலளிப்பு பிரிவு மக்களை அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment