கோர விபத்தினை ஏற்படுத்தியவன் தொடர்பில் வெளியான பல தகவல்கள்
விபத்து முந்தைய நாள் நள்ளிரவு வரை அவிசாவெல்லை பகுதியில் மேலும் இருவருடன் மது அருந்தி, பின்னர் மூவரும் வாடகைக்காரில் ஏறி, அவிசாவெல்லை-கொழும்பு பிரதான வீதியில் கொழும்பை நோக்கி வேகமாக சென்றுள்ளனர். மயக்கமடையும் அளவுக்கு மது அருந்தியதாக கூறப்படும் நபர் வழியில் மேலும் இருவரை மோதிவிட்டு, அதிவேகமாக வாகனத்தை செலுத்திச்சென்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து நள்ளிரவு 12.30 மணியளவில் மீகொட சந்திப்பில் ரொட்டி தன்சல் நடைபெற்றுக்கொண்டிருந்த போது சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக்கண்டு, கடும் கோபமடைந்து, வரிசையில் காத்திருந்த மக்கள் மீது வாகனத்தை அதிவேகமாக மோதிச்சென்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வாகனத்தை நிறுத்தாமல் சென்ற போது பொலிஸார் மற்றும் அங்கிருந்த இளைஞர்கள் குழு துரத்திச்சென்று கொடகம சந்திப்பில் பிடித்துள்ளனர்.இதன்போது அவர் போதையில் சுயநினைவின்றி சிரித்துக்கொண்டே இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் முறையான சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்பதும், வாகனத்தின் உரிமமும் முன்பே வழங்கப்பட்டிருந்தது என்பதும் தெரியவந்துள்ளது.

Post a Comment