அஸ்வெசும பட்டியலில் இருந்து 4 லட்சம் குடும்பங்கள் நீக்கம்
அஸ்வெசும நலன்புரிப் பயனாளிப் பட்டியலில் இருந்த சுமார் 4 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள், இன்றைய தினம் (30) முதல் அந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தற்காலிகமாக வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட குடும்பங்களே இவ்வாறு பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இக்குடும்பங்களுக்கு மாதாந்தம் சுமார் 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. அஸ்வெசும பட்டியலில் இருந்த 'இடைநிலை' (Transitional) பிரிவைச் சேர்ந்த சுமார் 4 இலட்சம் குடும்பங்கள் ஏற்கனவே இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

Post a Comment