ஈரானியப் போர் இலங்கையில் ஏற்படுத்தியுள்ள உச்சக்கட்ட நெருக்கடி
ஈரானியப் போர் காரணமாக உள்நாட்டுப் பொருளாதாரத்தில் புதிய நெருக்கடிகள் உருவாகி வரும் சூழலிலும், கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் வர்த்தக நிறுவனங்களும் நுகர்வோரும் வங்கிகளிடமிருந்து மிக அதிவேகமாகப் பணத்தைக் கடனாகப் பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
மார்ச் மாதத்தில் மாத்திரம் வணிக வங்கிகள் தனியார் துறைக்கு 258.4 பில்லியன் ரூபாய் கடன்களை வழங்கியுள்ளன. இது பெப்ரவரி மாதத்தில் பதிவான 144.4 பில்லியன் ரூபாயுடன் ஒப்பிடுகையில் இருமடங்கு உயர்வாகும்.
கடந்த ஆண்டு (2025) நவம்பரில் பதிவான 262.6 பில்லியன் ரூபாய் என்ற வரலாற்றின் உச்சக்கட்ட மாதாந்தப் பதிவுக்கு மிக நெருக்கமாக இம்மாதப் பதிவு அமைந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 27.1 வீதம் அதிகரிப்பாகும்.
பெப்ரவரி மாத இறுதியில் வெடித்த ஈரானியப் போர், உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளதுடன், இலங்கையின் பொருளாதார மீட்சி மீதும் கடுமையான அழுத்தத்தைப் பிரயோகிக்கத் தொடங்கியுள்ளது.

Post a Comment