பிக்குவினால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட சிறுமிக்காக வாதாட, ஒரு சட்டத்தரணியும் முன்வரவில்லை
சிறுமி ஒருவரை தாகாத நடத்தைக்கு உட்படுத்திய அநுராதபுர பிரதான விகாரையின் தலைமை விகாராதிபதிக்கு எதிரான வழக்கு நேற்று (15.05.2026) அநுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குறித்த பௌத்த பிக்கு முன்னிலையாகாத நிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றன.
ஹேமரத்தன பிக்கு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, சிரேஷ்ட சட்டத்தரணி ரஞ்சித் ராஜகருணா உள்ளிட்ட 20 சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.
ஆனால் தகாத நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் உரிமைகளுக்காக எந்த வழக்கறிஞரும் அல்லது வேறு எந்த வெளி தரப்பினரும் முன்னிலையாகவில்லை...🥲
அநுராதபுரம் நீதிமன்ற நீதிபதி சியபத் சசிந்து விக்ரமரத்ன பல்லேகம ஹேமரத்ன தேரேரை 22ஆம் திகதியன்று அநுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
இவ்விவகாரத்தில் முதல் நபரான பல்லேகம ஹேமரத்ன தேரர் கோட்டை நீதிபதி பாசன் அமரசேன பிறப்பித்த உத்தரவின்படி இம்மாதம் 22ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment