Header Ads



சிக்கப் போகிறார்களா..?


கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கோவிட் 19 தொற்றின் போது ரெபிட் அண்டிஜன் பரிசோதனை கருவிகள் இறக்குமதியில் நடந்த மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை நடத்த தீர்மானித்துள்ளது.


பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றின் ஊடாக ரெபிட் அண்டிஜன் (rapid antigen test) பரிசோதனை கருவிகளை இறக்குமதி செய்ததில் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடு தொடர்பிலே விசாரணை நடத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.


3.1 பில்லியன் ரூபாய் பெறுமதியான அண்டிஜன் கருவிகளை இறக்குமதி செய்ததில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.