Header Ads



சமரிக்கு முக்கிய பதவி


இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அதபத்து, உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் (World Cricketers’ Association - WCA) வீரர்கள் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.


சமரி அதபத்துவுடன் இணைந்து ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான், இத்தாலியின் வேன் மேட்சன், நியூசிலாந்தின் டேரில் மிட்செல் மற்றும் மேடி கிரீன் ஆகியோரும் இந்தப் புதிய குழுவில் இணைந்துள்ளனர்.


இந்த நியமனம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சமரி அதபத்து,"இந்த உலகளாவிய அமைப்பில் ஒரு அங்கமாகத் தெரிவு செய்யப்பட்டதை இட்டு நான் பெருமையடைகிறேன்.


இது எனக்கு மட்டுமல்ல, இலங்கைக்கும் ஒட்டுமொத்த ஆசிய கிரிக்கெட் சமூகத்திற்கும் கிடைத்த கௌரவமாகும். உலகளவில் வீரர்களின் குரலை வலுப்படுத்தவும், குறிப்பாக ஆசிய வீரர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யவும் நான் பாடுபடுவேன்." என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.