Header Ads



மத்திய கிழக்கில் போர் நிறுத்தம், இலங்கை அரசாங்கம் வரவேற்ப்பு


மத்திய கிழக்கில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதையும், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே மீண்டும் பேச்சு தொடங்குவதற்கான வாய்ப்புகளையும் இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது.


இந்த முன்னேற்றமானது பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும், பொதுமக்களின் மனிதாபிமானத் துயரங்களைக் குறைக்கவும் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான நடவடிக்கையாகும் என  வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பிராந்தியத்தில் நிரந்தரமான மற்றும் நிலையான தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்குமாறும், போர் நிறுத்தத்தை சாத்தியப்படுத்தவும், பேச்சு தொடங்கவும் தூதரக ரீதியாகப் பங்களிப்பு செய்த நாடுகளின் பாத்திரத்தையும் இலங்கை பாராட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.