Header Ads



NPP அரசாங்கத்தின் அமைச்சர்கள், MP க்கள் எவ்வாறு சொத்துக்களை ஈட்டினார்கள்..?


அமைச்சர் கே.டி. லால் காந்த உள்ளிட்ட என்பிபி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு சொத்துக்களை ஈட்டினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு கோரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்குச் செல்ல ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருவதாக அந்த கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


விசேடமாக அமைச்சர் லால் காந்த தனது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பித்தபோது அவரது சொத்து மதிப்பு 46 கோடி ரூபாவிற்கும் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.


ஒரு வருடத்திற்குள் இவ்வளவு பாரிய சொத்துக்கு அவர் உரிமையாளரானது எவ்வாறு சாத்தியமானது எனவும்,  சொத்துக்களில் 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மாற்றம் ஏற்பட்டால் ஒரு மாத காலத்திற்குள் புதிய சொத்து மற்றும் பொறுப்பு விபரக் கூற்றை சமர்ப்பிக்க வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.