Header Ads



மரணத்திலும் இணைபிரியாத ஆத்மார்த்த தம்பதியர்


இந்தியா - மலப்புறம்  அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் மரணித்த 9  பேரில் ஒருவர் அப்துல் மஜீத். அந்த ஆரம்ப பள்ளி ஆசிரியரான  அப்துல் மஜீத் பிறவியிலேயே பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி.


மஜீத் மாஸ்டர் என்று அந்த ஊரைச் சேர்ந்தவர்களாலும், மாணவர்களாலும் அழைக்கப்படும் அனைவருக்கும் பிரியமானவர்.


வகுப்பறையில் பாட்டு பாடியும்,  கதை சொல்லியும் புதிய புதிய தகவல்களை சொல்லுபவர். ஆதலால் மாணவர்களுக்கு மஜீத் மாஸ்டர் ஒரு Students Friendly Teacher.


அவரது மனைவி றொஹியா, தான் கணவரின் வழித்துணையாக அவர் எங்கு சென்றாலும் கரம்பிடித்து அழைத்துச் செல்பவர்.


அதேபோல் இந்த சுற்றுலாவுக்கும்  கணவருக்கு துணையாக றொஹியா உடன் சென்றிருந்த நிலையில் எதிர்பாராது நடந்த விபத்தில் இருவரும் மரணித்தது ஊராரையும், குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


பார்வைக்குறைபாடுக்கு மத்தியில் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் படித்து அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்த மஜீத் மாஸ்டர் சிறுகச்சிறுக சேமித்த பணத்தில் சொந்தமாக ஒரு வீடு கட்டி கடந்த ரமலான் மாதம் துவங்குவதற்கு ஒருவாரம் முன்பு தான் புதுவீட்டில் குடியேறி இரண்டு மாதங்கள் பூர்த்தியாகும் முன் மரணத்தை தழுவியது சோகமான தருணம்.


அல்லாஹ் மஃபிறத் அருள்வானாக...

Colachel Azheem

No comments

Powered by Blogger.