Header Ads



நிதி மோசடிக்காக வந்தவர்கள் கட்டுநாயக்கவில் பிடிபட்டனர்


கணினி  நிதி மோசடிகளைச் முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த 9 சீனர்கள் இன்று (16) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 


இவர்களிடமிருந்து 2 கோடியே 40 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான மின்னணுத் தொடர்பு சாதனங்களை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.


அவர்கள் தங்களது உடல் மற்றும் ஆடைகளுக்குள் செல்லோடேப் மூலம் ஒட்டி மறைத்து வைத்திருந்த 383 பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள், 101 டெப் கணினிகள் மற்றும் 06 வைஃபை ரவுட்டர்களை  அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.