2 பில்லியன் ரூபா நட்டம், சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தியே தீருவோம்
நாடாளுமன்றத்தில் தமக்கிருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி நிலக்கரி மோசடியில் ஈடுபட்ட அமைச்சரைப் அரசாங்கம் பாதுகாத்தாலும், சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தியே தீருவோம் என முஜிபுர் ரஹ்மான் Mp தெரிவித்தார்.
அரசாங்கம் தனது பெரும்பான்மையைப் பயன்படுத்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்கும் என்பது எமக்கு முன்பே தெரியும். ஆனால், ஊழலுக்கு இடமளிக்க மாட்டோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று மோசடிக்கு ஆதரவாக வாக்களித்துத் தங்களைக் காத்துக்கொண்டுள்ளனர் என்பதை மக்கள் இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் பிரேரணையைத் தோற்கடித்ததால் இந்தப் பிரச்சினை முடிந்துவிடாது.
தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவினால் நாட்டுக்கு நேரடியாக 22 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும், இது அரச கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையிலேயே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. "இந்த மோசடிக்கு அமைச்சர் குமார ஜயக்கொடி மாத்திரம் பொறுப்பல்ல. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட முழு அமைச்சரவையுமே பொறுப்புக்கூற வேண்டும்.

Post a Comment