Header Ads



என்னை கைது செய்திருக்கலாம்தானே, அவர் தேங்காய் துருவிக்கொண்டா இருந்தார்...?


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படும்போது உதய கம்பன்பில, சரத் வீரசேகர போன்றவர்கள் ஏன் பதற்றமடைகிறார்கள் என புரியவில்லை. என்றாலும் இந்த தாக்குதலுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக வீரசேகர தெரிவித்த விடயம் தொடர்பில் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பேன் என  முஜிபுர் ரஹ்மான் Mp தெரிவித்தார்.


சரத் வீரசேகர 2 வருடங்கள் பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சராக இருந்தார். இந்த தாக்குதலுடன் நான் தொடர்புபட்டிருந்தால் அப்போது அவர் என்னை கைது செய்திருக்கலாம்தானே. அவர் அமைச்சுப்பதவியை வைத்துக்கொண்டு தேங்காய் துருவிக்கொண்டா இருந்தார்.


ஆனால் அவர் ரிஷாத் பதியுதீன், அசாத் சாலி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்றவர்களையே கைது செய்து விசாரணை செய்தார். ஆனால் அவர்கள் அனைவரும் நிரபராதிகள் என விடுதலையாகி இருக்கிறார்கள். என்றாலும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியை தேடுவதால், இவர்கள் தற்போது பதற்றமடைந்திருக்கிறார்கள் என்பது மட்டும் எனக்கு புரிகிறது. 


கொழும்பில் திங்கட்கிழமை (6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.