விசாரணைகளில் கண்டறியப்பட்ட ஹாஜி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான 22 தேரர்களில், 19 பேர் கஞ்சா பாவித்தமை தெரியவந்துள்ளது.
ஜம்புரலிய பகுதி விகாரையொன்றைச் சேர்ந்த 3 தேரர்கள் மாத்திரம் இதற்குமுன் தாய்லாந்துக்குச் சென்றுள்ளனர். அந்நேரத்தில் கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்கள் அத்துருகிரிய வீடொன்றில் மறைக்கப்பட்டிருந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் மே மாதம் மேலும் 40 தேரர்களை தாய்லாந்துக்கு அழைத்துச்செல்ல இவர்கள் திட்டமிட்டிருந்தமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த கடத்தல் தொழிலை இலங்கையிலுள்ள வர்த்தகர்கள் போன்று தோற்றமளிக்கும் இருவர் பின்னணியிலிருந்து வழிநடத்துவதும், அவர்களில் ஒருவர் 'ஹாஜி' என அழைக்கப்படுவதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
(அததெரண)

Post a Comment