ஆமினாவின் கபுறடியில் காத்திருக்கும் நாய்
கடந்த 18.04.26 சனிக்கிழமை ஆமினா தனது மகளின் வீட்டுக்கு சென்று விட்டு திரும்ப வந்தவர் காம்பவுண்ட் கேட் திறந்து நடந்து செல்லும் வழியில் வீட்டு முற்றத்தில் மயங்கி விழுந்தார்.
ஆமினா அருகில் ஓடிச்சென்ற நாய் அவர் அசையாமல் கிடப்பதை பார்த்து அங்குமிங்கும் ஓடி பயங்கர சப்தத்துடன் குரைத்ததை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஆமினாவை மருத்துவமனை கொண்டு செல்ல பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஆமினா ஜனாஸாவாக வீட்டுக்கு கொண்டு வருவதை பார்த்த நாய் சோகமாக அங்கே ஓரமாக சுற்றிச்சுற்றி வலம்வந்தது. ஜனாஸா அடக்கம் செய்ய மசூதிக்கு கொண்டு செல்லும் போது கூட்டத்தின் பின்னால் நாயும் சென்றது.
பின்னர் ஆமினாத்தா ஜனாஸாவை அடக்கம் செய்து உறவினர்கள் திரும்பிய பிறகும் அந்த நாய் கபுறின் அருகிலேயே வலம் வந்தது பார்த்த அனைவருக்கும் ஆமினாத்தா மீதான நாயின் பாசத்தை உணர முடிந்தது.
அவ்வப்போது எங்காவது வெளியே செல்லும் அந்த நாய் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இரவு பகலாக ஆமினாத்தா அடக்கம் செய்த கபுறை பார்த்தவாறு அமர்ந்திருக்கிறது.
பசிக்கு உணவு வழங்கிய காரணமாக வாயில்லா ஜீவனுக்குள்ளும் உறவும் உணர்வும் உண்டு என்பதை நிரூபிக்கும் பந்தம் இது.. ❤️
Colachel Azheem

Post a Comment