பெண் வைத்தியருக்கு, இரண்டாவது முறை பாலியல் தொல்லை
களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், அங்கு பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் வைத்தியர் சந்தேக நபரின் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கச் சென்றபோது, அவர் வைத்தியரின் மார்புப் பகுதியைத் தொட்டுள்ளார்.
அந்த நேரத்தில் வைத்தியர் இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்போவதாகத் எச்சரித்துள்ளார். எனினும், மீண்டும் பரிசோதனை மேற்கொண்டபோது இரண்டாவது முறையும் அந்த வைத்தியருக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் இன்றைய தினம் (15) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Post a Comment