ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி: இலட்சங்களை இழந்த மக்கள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இணையதளங்கள் ஊடாக மக்களிடம் லட்சக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்து CID விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பமுணுகம பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 55 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. கடவத்தை பகுதியைச் சேர்ந்த பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 3.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் போலி இணையதளம் மூலம் திருடப்பட்டுள்ளது.

Post a Comment