இலங்கையை அதிரச் செய்துள்ள வங்கி மோசடி சம்பவம்
NDB வங்கியின் உட்புற நிதி மோசடிச் சம்பவம் தொடர்பாக வங்கி முகாமையாளர் ஒருவர் உட்படப் பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் CID திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து NDB வங்கி விடுத்துள்ள அறிக்கை.
இந்தச் சம்பவத்தினால் ஏற்படக்கூடிய நட்டம் 2026 மார்ச் 31 உடன் முடிவடையும் காலாண்டில் சுமார் 4.0 பில்லியன் ரூபா.
எனினும், வங்கியின் நிதி நிலைமை ஸ்திரமாக உள்ளது. 2025 ஆம் ஆண்டில் வங்கி 11 பில்லியன் ரூபா நிகர லாபத்தை ஈட்டியுள்ளதுடன், 2026 மார்ச் 31 அளவில் வங்கியின் மொத்த சொத்து தளமானது 990 பில்லியன் ரூபாவாகும் என தெரிவித்துள்ள வங்கி, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், ஊகங்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment