இலங்கையில் உள்ள அரபு தூதர்களுக்கும், ஜனாதிபதிக்கும் சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமாரவிற்கும் இலங்கையில் உள்ள அரபு தூதர்களுக்கும் இடையில் இன்று 8 ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி இலங்கையின் விருப்பம் என்றும், போரில் ஈடுபடாத மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் மீதான தாக்குதல்களை நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம் என்றும் கூறி தனது வருத்தத்தை அநுரகுமார வெளிப்படுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றியைத் தெரிவித்து. குறிப்பாக எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறையிலும் அவர்களின் பங்களிப்புகளைப் பாராட்டியுள்ளார்.

Post a Comment