எமது பயணத்தில் முன்னோடிகளாக வலுவாக கைகோர்க்குமாறு அனைத்துப் பெண்களுக்கும் அழைப்பு
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் திகதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இலங்கையில், பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாசார ரீதியாக பெண்களின் வகிபாகம் தனித்துவமானது. இந்தத் துறைகள் அனைத்திலும் பெரும் பொறுப்பைச் சுமக்கும் பெண்களின் அந்த வகிபாகத்தை பாராட்டி, பெண்களின் உரிமைகள், சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை இந்நாளில் குறிப்பாக நினைவுகூர்ந்தாலும், அதனை ஒரு நாளுக்கு மட்டுப்படுத்தப்பட முடியாது என்பதை நாம் நம்புகிறோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (08) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
அனைத்து தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தல்களிலிருந்து சமூகத்தையும் நாட்டையும் விடுவித்து, ஒழுக்க நெறி மற்றும் கருணை உள்ள எதிர்காலத் தலைமுறையையும் முன்னேற்றகரமான நாட்டையும் கட்டியெழுப்புவதற்காக, உறுதியுடன் முன்னோக்கிச் செல்லும் எமது பயணத்தில் முன்னோடிகளாக வலுவாக கைகோர்க்குமாறு அனைத்துப் பெண்களுக்கும் அழைப்பு விடுப்பதோடு அர்த்தமுள்ள மகளிர் தினத்திற்கான எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Post a Comment