எரிபொருள் விநியோகத்தை தடுக்கும் வகையில் பிரசாரம் செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை
எரிபொருள் விநியோகத்தை தடுக்கும் வகையில் பிரசாரம் செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு அமைதியான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதைத் தடுக்க முயற்சிப்போர் அல்லது குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் போலி தகவல்கள் மற்றும் போலிப் பிரசாரங்களை (Fake News) சமூகமயப்படுத்துவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
தற்போதைய உலகளாவிய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, எரிபொருள் விநியோகத்தை சீராக முன்னெடுக்க மக்கள் முன்வர வேண்டும். எரிபொருள் விநியோகத்தை முறையாக நிர்வகிக்கும் பொருட்டு, முழு ஆதரவை வழங்க வேண்டும் என அமைச்சர் இதன்போது விசேட கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Post a Comment