Header Ads



ஜனாதிபதியின் இப்தாரை நிராகரிக்கிறேன், ஏனையவர்களும் புறக்கணிக்க வேண்டும்


ஜனாதிபதியினால் எனக்கு வழங்கப்பட்ட இப்தார் விருந்துக்கான அழைப்பை நான் நிராகரிக்கிறேன். அதில் நான் பங்கேற்க மாட்டேன்  மற்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதனை கவனத்தில் கொண்டு இப்தார் வைபவத்தை பகிஷ்கரிக்க வேண்டும் என நிசாம் காரியப்பர் Mp தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (17) உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,


கடந்த மாதம் 3ஆம் தேதி, ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வந்து ஆட்சிக் கொள்கை உரையை நிகழ்த்தினார். அந்த உரையில், வேறு உலகின் நடைபெற்று வரும் யுத்த நிலை குறித்து பேசுவது போல் பேசினார்.


 குறிப்பாக, இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து, சர்வதேச சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் முரணான வகையில் இறானுக்கு எதிராக மேற்கொண்டு வரும் தாக்குதல்கள், அங்கு உள்ள தலைவர்கள் கொல்லப்படுதல் போன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து ஒன்றுமே பேசவில்லை.


இத்தகைய தீவிரமான மற்றும் மனிதாபிமான பிரச்சினைகள் குறித்து, குறைந்தபட்சம் தனது கவலைக்கூட வெளிப்படுத்தாத இந்த அரசாங்கத்தையும், ஜனாதிபதியின் கீழ் செயல்படும் வெளிநாட்டு கொள்கையையும் நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த நிலைப்பாட்டை வெளிப்படையாக பதிவு செய்வது எனது கடமையாகும்.

No comments

Powered by Blogger.