ஈரான் ஜனாதிபதி இன்று ஆற்றிய உரை குறித்து, அவரது அலுவலகத்தின் விளக்கம்
பிராந்தியத்திலுள்ள அண்டை நாடுகள், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்காதவரை, அந்த நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தாது என்பதே ஜனாதிபதியினது செய்தியின் சாராம்சம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரானிய இஸ்லாமியக் குடியரசு ஒருபோதும் எந்தவொரு கட்டாயப்படுத்தலுக்கும் அல்லது அடக்குமுறைக்கும் அடிபணியாது எனத் தெரிவித்துள்ள அவர், பிராந்தியத்திலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களிலிருந்து முன்னெடுக்கப்படும் எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கும் ஈரானின் வலிமைமிக்க ஆயுதப்படைகள் தீர்க்கமான மற்றும் அதிரடியான பதிலடியைக் கொடுக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, முன்னதாக ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், அண்மைய ஏவுகணை தாக்குதலுக்கு அண்டை நாடுகளிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.
இதனை டொனால்ட் ட்ரம்ப் போன்றவர்கள், "ஈரான் சரணடைந்துவிட்டது" என்று விமர்சித்தனர்.
எனவே, "நாங்கள் யாருக்கும் அடிபணிய மாட்டோம், எமது ஆயுதப்படைகள் பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளன" என்று கூறுவதன் மூலம் தனது நாட்டின் கௌரவத்தையும் வலிமையையும் ஈரான் நிலைநிறுத்த முயல்கிறது என்ற செய்தியை இந்த விளக்கம் வழங்கியுள்ளது.

Post a Comment