ஈரானால் 5 ஆண்டுகளுக்குப் போரைத் தொடர முடியும் - பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் இஜாஸ்
ஈரானிடம் உள்ள படை பலத்தைக் கொண்டு இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து போரை முன்னெடுக்கும் திறன் அதற்கு இருப்பதாகப் பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம். எம். இஜாஸ் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய அரசியல் நகர்வுகள் குறித்துக் (விழுதுகள் நிகழ்ச்சி) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.
ஈரானிடம் தற்போது பல்வேறு தரப்பட்ட சுமார் இரண்டரை லட்சம் (250,000) ஏவுகணைகள் கைவசம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில், ஈரான் ஒரு நாளைக்கு மாத்திரம் 600 முதல் 700 வரையான ஏவுகணைகளை இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஏனைய எதிரப்பு நாடுகளை இலக்கு வைத்து ஏவி வருகின்றது.
இந்த வேகத்தில் தாக்குதல்களைத் தொடுத்தாலும், தன்னிடம் உள்ள ஏவுகணை இருப்பைக் கொண்டு எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குப் போரைத் தடையின்றித் தொடர முடியும் என ஈரான் தரப்பு கூறுவதாக விரிவுரையாளர் எம். எம். இஜாஸ் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment