5 வயதுக்குட்பட்ட சிறுவர் (Zoom) வகுப்புகள் முற்றிலும் முரணானது
3 முதல் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்காக நடத்தப்படும் இணையவழி கருத்தரங்குகள் மற்றும் 'சூம்' (Zoom) வகுப்புகள், கல்வி உளவியலுக்கும் சிறுவர் அபிவிருத்திக் கொள்கைகளுக்கும் முற்றிலும் முரணானது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சிறுவயதுக் கற்றல் என்பது செயல்பாடுகள் மற்றும் சமூக இடைவினைகள் சார்ந்தே அமைய வேண்டும் என்றும், டிஜிட்டல் திரைகள் வழியாகக் கற்பது சிறுவர்களின் கவனம் செலுத்தும் திறன், சமூகத் திறன்கள் மற்றும் ஆக்கபூர்வமான சிந்தனையைப் பாதிக்கும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
தொழில்நுட்பக் கருவிகளுக்குச் சிறுவர்களை அதிகளவில் உட்படுத்துவது அவர்களின் கண் பார்வை மற்றும் மூளை வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிப்பதோடு, இயற்கையான உடல் மற்றும் மன வளர்ச்சியைப் பாதிக்கும். எனவே, சிறுவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இவ்வாறான இணையவழி செயல்பாடுகளைத் தவிர்க்குமாறு பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment