Header Ads



கடவுச்சீட்டு விநியோகிக்கும் இடைநிறுத்தம்


கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கணினி அமைப்பு மீண்டும் வழமைக்குத் திரும்பியவுடன் இந்தச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.


தற்போது கணினி அமைப்பை மீண்டும் சீர்செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.