Header Ads



பதவி இழந்தார் சோஹாரா புகாரி - வர்த்தமானி வெளியாகியது


கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா புகாரி கடந்த கொழும்பு மாநகர சபை வரவுசெலவு திட்ட வாக்கெடுப்பில், கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக தன்னுடைய வாக்கை NPP க்கு வழங்கியதன் காரணமாக கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்படுத்தப்பட்டார். 


இதையடுத்து,  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம்  நிசாம் காரியப்பர் அவரை கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தார்.


இதன் விளைவாக, உரிய முறையில் சோஹாரா புகாரி தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார், என்பது தேர்தலில் ஆணையாளரிடமிருந்து அனுப்பப்பட்ட அறிவித்தலில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது


(தகவல் மூலம் நிசாம் காரியப்பர் Mp)

No comments

Powered by Blogger.