இலங்கையை எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக மாற்றும் முயற்சிக்கு தற்காலிக பின்னடைவு
இது குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஏ.ராஜகருண கூறுகையில், "சட்டமா அதிபர் திணைக்களத்துடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து சட்டச் சிக்கல்களும் தீர்க்கப்பட்ட பின்னரே விலைமனு விடப்படும்," எனத் தெரிவித்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவின் 'கெய்ர்ன் இந்தியா' (Cairn India) நிறுவனம் நடத்திய ஆய்வில், மன்னார் வளைகுடாவில் உள்ள பராகுடா மற்றும் டொராடோ (Dorado) ஆகிய 2 கிணறுகளில் ஹைட்ரோகார்பன் படிவுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இலங்கையில் 4 நான்கு முக்கிய படுகைகள் உள்ளன.
இலங்கையின் இந்த அகழ்வாராய்ச்சி திட்டங்களில் பங்கேற்க இந்தியா மற்றும் கட்டார் போன்ற நாடுகளைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்தத் தடைகள் நீங்கும் பட்சத்தில், இலங்கை தனது எரிசக்தி தேவையில் தன்னிறைவு பெறுவதுடன் பொருளாதார ரீதியாகவும் பெரும் வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment