Header Ads



கறிவேப்பிலை பறித்துக்கொண்டிருந்தபோது துயரம்


கலஹா, நவனெலிய, கிரிபோகஹைன்ன பகுதியில் மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


இன்று (07) 1 இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


இறந்தவர்கள் 46 வயதுடைய தாயும் 13 வயதுடைய மகளும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


கறிவேப்பிலை மரத்தில் கறிவேப்பிலை பறித்துக்கொண்டிருந்த போது, தரையில் விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியில் சிக்கியதால் மின்சாரம் தாக்கி இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


சம்பவம் தொடர்பில் கலஹா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments

Powered by Blogger.