Header Ads



இந்தியாவில் முஸ்லிம்களின் தொகை ஒருபோதும் இந்துக்களின் எண்ணிக்கையை முந்தாது


இந்தியாவில் மக்கள் தொகை ரீதியாக இந்துக்களை முஸ்லிம்கள் முந்திவிடுவார்கள் என்ற கருத்தினை நிராகரித்துள்ள  அசாதுதீன் ஒவைசி, அத்தகைய அச்சங்கள் தவறானவை என்றும், அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் கூறினார்.


மக்கள் தொகை குறித்த விவாதங்கள் முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து நடத்தப்படுகின்றன.  முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவதாகக் கூறுகிறார்கள். முஸ்லிம்களின் மக்கள் தொகை நிலையாகவே இருக்கும். இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள் தொகை ஒருபோதும் இந்துக்களின் மக்கள் தொகை எண்ணிக்கையை முந்தாது.


25-30 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் மக்கள் தொகைக்கு வயதாகும்போது, என்னவாகும் என்பதை இப்போதுதான் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். எனவேதான் RSS  தலைவர் மோகன் பகவத் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றெடுக்குமாறு கூறுகிறார். அவர் தானே அதைச் செய்யவில்லை என்பது வேறு விஷயம்" என்று ஒவைசி கூறினார்.

No comments

Powered by Blogger.