புத்தர் சிலையை வைக்கமுயன்ற பிக்குகள் உட்பட சந்தேகநபர்களுக்கு பிணை
திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்களையும் இன்று (11) பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றை அகற்றுவதற்கு முற்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி அங்கு அமைதியற்ற சூழல் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.

Post a Comment