நாம் ட்ரம்பின் உலகில் வாழ்கிறோம் - ரணில்
நாம் ட்ரம்பின் உலகில் வாழ்கிறோம். ஜே.ஆர். ஜயவர்தனவின் யுகத்தில் நாம் இல்லை. அதே சமயம் ட்ரம்பிற்குச் சவால் விடும் சீனாவின் ஆதிக்கம் நிறைந்த உலகிலும் வாழ்கிறோம்.
எமது அண்டை நாடான இந்தியா ஒரு வல்லரசாக உருவெடுத்து வரும் காலத்திலும் நாம் வாழ்கிறோம். இத்தகைய சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ள வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சி 'ஸ்மார்ட்' அரசியலைத் தழுவிய ஒரு புதிய தலைமுறைத் தலைமைத்துவத்திற்காகத் தயாராகி வருவதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் பிறந்த தலைமுறையைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டிய நேரம் இது வந்துவிட்டது.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் 'SMART UNP'டிஜிட்டல் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Post a Comment