இறுதி இலக்கு கோட்டாபய ராஜபக்சவே
சுரேஷ் சலே கைது நடவடிக்கையின் இறுதி இலக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே என்றும், அவர் விடுவிக்கப்படும் வரை இந்த அரசியல் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமையானது, நாட்டின் தேசிய பாதுகாப்பை சீர்குலைத்து புலம்பெயர் அமைப்புகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் ஒரு "அரசியல் சதி" என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருப்பதை பாதுகாப்புச் சபைக்கு முதலில் சுரேஷ் சலேயே எச்சரித்தார். அன்று அந்தத் தகவல்களைப் புறக்கணித்துவிட்டு, இன்று எச்சரிக்கை விடுத்த அதிகாரியையே சிறையில் அடைப்பது வேடிக்கையானது என அவர் குறிப்பிட்டார்.
பத்தரமுல்லையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Post a Comment