கஸ்ஸப தேரரின் அப்பட்டமான பொய்
தன்னைப் பற்றி ஊடகங்களுக்குப் பொய் கூற்றுக்களைத் தெரிவிப்பதன் மூலம் பலங்கொட கஸ்ஸப தேரர் எதிர்பார்க்கும் உள்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்று பிரதி அமைச்சர், சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
தாமோ அல்லது தனது பிரதிநிதி ஒருவரோ பலங்கொட கஸ்ஸப தேரருக்குப் தனிப்பட்ட முறையில் ஒருபோதும் தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளவில்லை
நேற்று (12) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய கஸ்ஸப தேரர் அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகள் தமக்கும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய தேரர்களுக்கும் அழைப்பு விடுத்து, அழுத்தம் கொடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
கஸ்ஸப தேரரின் இந்தக் கூற்று தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, "முசாவாதா வேரமணி சிக்காபதம் சமாதியாமி (பொய் பேசுவதைத் தவிர்த்தல்) என்ற வாசகத்தை எமக்குக் கற்றுக்கொடுப்பவர்களே கௌரவ தேரர்கள்தான். இது ஒரு அப்பட்டமான பொய் என்பது கஸ்ஸப தேரருக்கு நன்றாகத் தெரியும்" எனக் குறிப்பிட்டார்.

Post a Comment