Header Ads



சட்டத்தரணி, அவரது மனைவி சுட்டுக்கொலை - குற்றவாளிகளைக் கைதுசெய்ய 10 குழுக்கள்


அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகளைக் கைது செய்ய 10 விசேட விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.


காவல்துறை மாஅதிபரின் நேரடி ஆலோசனையின் பேரில் இந்த விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.


இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID), கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு (CCID), விசேட அதிரடிப்படை (STF) உள்ளிட்ட 10 விசேட குழுக்கள் கொலையாளிகளை அடையாளம் காணவும், கைது செய்யவும் தீவிர தேடுதல் மற்றும் விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

No comments

Powered by Blogger.