Header Ads



அல்குர்ஆனின் கட்டளையும், பிரான்ஸ் அரசாங்கத்தின் அறிவிப்பும்


உணவை வீணாக்குவதற்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்களை பிரான்ஸ் அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பிரான்ஸ் இந்த விஷயத்தில் உலகிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது. அந்த வகையில் உணவு வீணாக்கப்படுவதை சட்டப்பூர்வமாக தடைசெய்த முதல் நாடு பிரான்ஸ்.


சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படாத அல்லது காலாவதி தேதி நெருங்கும் உணவுகளைக் குப்பையில் கொட்டவோ, அழிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.


அத்தகைய உணவுகளைத் தொண்டு நிறுவனங்களுக்கும், உணவு வங்கிகளுக்கும் (Food Banks) தானமாக வழங்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


உணவை வீணாக்கினால் சுமார் €3,750 (சுமார் ₹ 3.3 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்படும்.


இப்போது வணிக நிறுவனங்கள் மட்டுமின்றி, வீடுகளிலும் உணவுக் கழிவுகளை மற்ற குப்பைகளோடு கலக்கக் கூடாது என்று உத்தரவு போடப்பட்டுள்ளது.


உணவகங்களில் வாடிக்கையாளர்கள் மீதப்படுத்தும் உணவை வீட்டிற்கு எடுத்துச் செல்ல 'Doggy bags' (மீதமுள்ள உணவை பேக் செய்து தருதல்) வழங்குவதை பிரான்ஸ் கட்டாயமாக்கியுள்ளது.


பிரான்ஸைப் பின்பற்றி மற்ற ஐரோப்பிய நாடுகளும் இத்தகைய சட்டங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டு வருகின்றன.


இஸ்லாமிய அரசாங்கம் செய்யவேண்டிய பணியை அவர்கள் செய்கிறார்கள்.


இந்த விஷயத்தில் இஸ்லாமிய சமூகத்திடம்தான் எவ்வளவு அலட்சியம்!


"உண்ணுங்கள், பருகுங்கள், ஆனால் விரயம் செய்யாதீர்கள்!” (8:31) என்பது அல்லாஹ்வின் கட்டளை அல்லவா?


நாம் வீணடிக்கும் ஒவ்வொரு பருக்கை உணவுக்கும், நாளை அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்!


✍️ நூஹ் மஹ்ழரி

No comments

Powered by Blogger.