Header Ads



235 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி


நுவரெலியா - நானுஓயா கிளாரண்டன் பகுதியில் அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி செங்குத்தான சரிவில் 235 அடி பள்ளத்தில் விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


இதில் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (02)  இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

No comments

Powered by Blogger.