ஆசனப்பட்டி விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதியை அவதூறாகத் திட்டிய 5 பேர் கைது
மத்தல அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் பேருந்தொன்றில் வந்த குழுவினர், ஆசனப்பட்டி விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதியை அவதூறாகத் திட்டியவாறும், பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் நடந்துகொண்ட காணொளியொன்று கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பரவியிருந்தது.
இச்சம்பவம் தொடர்பான ஐந்து நபர்கள் பேலியகொடை போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, கடான பொலிஸார் ஊடாக ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய அவர்கள் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் அவர்களை அடையாள அணிவகுப்பிற்கும் உட்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Post a Comment