Header Ads



70 மில்லியன் ரூபாவை தவறாகப் பயன்படுத்திய விவகாரம் - ஏப்ரல் 2 விசாரணை


கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ஏப்ரல் 02ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (19)  அன்று உத்தரவிட்டுள்ளது.


குறித்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா முர்ஃபுருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


நாட்டில் ரக்பியை ஊக்குவிப்பதாக தெரிவித்து இந்திய கிரிஷ் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்ட 70 மில்லியன் ரூபாவை தவறாகப் பயன்படுத் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.