சட்டத்தரணி தொழிலுக்கு இழைக்கப்பட்ட ஒரு பெரும் இழுக்காகும்
போலியான உறுதிப்பத்திரங்களை தயாரித்து, பிறருக்குச் சொந்தமான காணியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஒருவர் உட்பட இருவருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, 2 பிரதிவாதிகளுக்கும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தலா 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
இரண்டு பிரதிவாதிகள் மீதும் உயர் நீதிமன்றத்தில் 26 வழக்குகளைத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்திருந்தார். குற்றவாளிகளுக்குத் தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன்னர், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி ஓஸ்வால்ட் லக்ஷ்மன் பெரேரா,,
அதில் “கௌரவ நீதிபதி அவர்களே, இந்தச் சட்டத்தரணி செய்துள்ள செயலானது மிகவும் கௌரவமான சட்டத்தரணி தொழிலுக்கு இழைக்கப்பட்ட ஒரு பெரும் இழுக்காகும். மக்கள் சட்டத்தரணிகள் மீது கொண்டுள்ள நம்பிக்கையினால் தான் தமது காணிகளின் உறுதிப்பத்திரங்களை அவர்களிடம் ஒப்படைக்கின்றனர். இவ்வாறான தொழிலின் கௌரவத்தைச் சீரழிப்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment