Header Ads



செயற்கை கருதரிப்பு இலவச சிகிச்சைக்கு 2,140 தம்பதியினரிடமிருந்து விண்ணப்பங்கள்


ஐ.வி.எவ் எனப்படும் செயற்கை கருதரிப்புக்கான, இலவச சிகிச்சை முறைக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனை அறிவித்துள்ளது.


அதன்படி, 2,140 தம்பதியினரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர், விசேட மருத்துவ நிபுணர் கமல் செனவிரத்ன, Hiru செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.


விண்ணப்பதாரர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்கும், 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிலையில், இலவச சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டவுடன், வயது மற்றும் உடல் ஆராக்கிய நிலைமைகளின் அடிப்படையில், முன்னுரிமை வழங்கப்பட்டு, ஐ.வி.எவ் எனப்படும் செயற்கை கருதரிப்புக்கான சிகிச்சை முன்னெடுக்கப்படும் என விசேட மருத்துவ நிபுணர் கமல் செனவிரத்ன கூறியுள்ளார்.


இந்த நிலையில், காசல் மருத்துவமனையில், ஐ.வி.எவ் எனப்படும் செயற்கை கருதரிப்பு சிகிச்சைக்கான கட்டடத்தின் நிர்மானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.


எனினும், அதிநவீன ஆய்வுக்கூட வசதிகள் இதுவரை நிறைவு செய்யப்படவில்லை என மருத்துவமனையில் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.


குறித்த ஆய்வு கூடங்களின் நிர்மானப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


குறித்த விடயங்கள் நிறைவு பெற்றதும், முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை ஆரம்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.