இலங்கைக்கு கடத்தப்பட்ட 16 கோடி பெறுமதியான குஷ் பிடிபட்டது
இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட சுமார் ரூ. 16 கோடி பெறுமதியுடைய 16 கி.கி ‘குஷ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இந்த போதைப்பொருள், துபாய் ஊடாக எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் நேற்று (15) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
கைது செய்யப்பட்டநபர்கள் கொழும்பு, வெல்லம்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்த இரு ஆண்கள் மற்றும் 35 வயது ஒரு பெண் ஆவர். இவர்களில் ஒருவர் மசாஜ் நிலையமொன்றை நடத்தி வருபவர். கைது செய்யப்பட்ட மூவரும் இன்று (16) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Post a Comment