Header Ads



சஜித்தின் கூட்டத்தை JVP குழப்ப முயன்றதாக குற்றச்சாட்டு


பிரதேசத்தின் விவசாயப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (15) சூரியவெவ, அந்தரவெவ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்ட போது, இரு தரப்பினரிடையே முறுகல் நிலை ஏற்பட்டது. 


இந்தக் கூட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச தலைவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. 


அங்கு ஒருவர் உரையாற்றிக்கொண்டிருந்த போது, மற்றொருவர் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 


அதனைத் தொடர்ந்து ஏற்பாட்டாளர்கள் குறித்த நபரையும் அவருடன் வந்தவர்களையும் கூட்ட இடத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர். இதன்போது இந்த அமைதியின்மை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 


பின்னர் சூரியவெவ பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், குழப்பமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரைக் கைது செய்தனர். 


நிலைமை வழமைக்குத் திரும்பிய பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் கூட்டத்தில் உரையாற்றினார். 


மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளர்கள் சிலர் வந்து இந்தக் கூட்டத்தைக் குழப்ப முற்பட்டதாகக் கூட்ட ஏற்பாட்டாளர்கள் இதன்போது குற்றம் சுமத்தினர்.


 

No comments

Powered by Blogger.