UNP, SJB கூட்டணி முயற்சிகள் 99.99 சதவீதம் வெற்றி - அரசாங்கத்துக்கு பாரிய சவாலாகும்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விரைவில் SJB தலைமையகத்துக்குச் செல்வார். இரு கட்சிகளினதும் செயற்குழுக்களை ஒன்றிணைத்து கூட்டு செயற்குழு கூட்டமொன்றை சிறிகொத்தாவில் நடத்த எதிர்பார்த்துள்ளோம். கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பில் இரு தலைவர்களுக்குமிடையிலான தனிப்பட்ட சந்திப்பின் போது தீர்மானிக்கப்படும்.
எம்மிலிருந்து பிரிந்து சென்ற நண்பர்களுடன் மீண்டும் இணைவதற்காக சிறிகொத்தாவை தூய்மைப்படுத்தி அழகுபடுத்தியுள்ளோம். UNP, SJB இணைந்த கூட்டணியை அமைப்பதற்கான முயற்சிகள் 99.99 சதவீதம் வெற்றியடைந்துள்ளது.
நாம் இணைந்தால் அது அரசாங்கத்துக்கு பாரிய சவாலாகும். அரசாங்கத்துக்கு எதிரான பாரிய பலம் மிக்க கூட்டணியொன்றை உருவாக்குவோம். பரந்துபட்ட கூட்டணி எதிரணியொன்றை உருவாக்குவதற்கும் ரணில் விக்கிரமசிங்க எமக்கு ஆலோசனைகளை வழங்குவார்.
ஹரின் பெர்னாண்டோ

Post a Comment