ஷிரந்தி ராஜபக்சவின் பெயரில் 40 கோடி பெறுமதியான வீடு - இலஞ்சம் ஆணைக்குழுவில் முறைப்பாடு
மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் பெயரில் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் கொழும்பு 05, டொரிங்டன் வீதியில் அமைந்துள்ள சுமார் 40 கோடி பெறுமதியான வீடொன்று தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
சிவில் சமூக ஆர்வலர் ஒருவர் தாக்கல் செய்த இந்த முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு ஏற்கனவே விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
முறைப்பாடு தொடர்பான உண்மைகளைச் சரிபார்க்க, முறைப்பாட்டாளர்களிடமிருந்து மேலும் வாக்குமூலங்களை ஆணைக்குழு பதிவு செய்துள்ளது.
விசாரணைகளின் அடுத்த கட்டமாக ஷிரந்தி ராஜபக்சவிடமிருந்தும் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment