Header Ads



பிரதியமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி


கைத்தொழில் அபிவிருத்தி பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி, இனந்தெரியாத நபர் ஒருவர் மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து அவதானமாக இருக்குமாறு பிரதி அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


பிரதி அமைச்சரின் பிரதிநிதி எனப் பொய்யாகக் கூறிக்கொள்ளும் நபர் ஒருவர், மக்களிடம் நிதி உதவி கோருவதாகவும், தனிப்பட்ட தகவல்களைக் திரட்டுவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.


இத்தகைய போலியான கோரிக்கைகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அடையாளம் தெரியாத நபர்களிடம் பணத்தையோ அல்லது இரகசியமான தனிப்பட்ட விபரங்களையோ பகிர வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.