Header Ads



இலங்கையில் (Rebuilding Sri Lanka) நிதி ஒன்று இருக்கிறதா, இல்லையா என கூறமுடியுமா..?


'டித்வா' சூறாவளியின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட (Rebuilding Sri Lanka) நிதி என்ற ஒன்று இன்றில்லையென ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இலங்கையில் (Rebuilding Sri Lanka) நிதி ஒன்று இருக்கிறதா? இல்லையா? என்பதை அரசாங்கத்தின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூற முடியுமா..?


நிதிக் குழுவின் தலைவராக நான் இதைச் சொல்கிறேன். தயவு செய்து இதை நிறுவுங்கள். தன்னிச்சையாக ஒரு நிதியை உருவாக்க முடியாது. அது நாட்டின் சட்டத்திட்டங்களின் பிரகாரம் இருக்க வேண்டும். 'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீள கட்டியெழுப்புவற்காக இந்த நிதி நிறுவப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இந்த நிதி இருக்கிறதா இல்லையா என்று சொல்லுங்கள்.


எழுந்து நின்று சொல்லுங்கள். இங்கே எந்த அமைச்சரும் இல்லை. துணை அமைச்சரும் இல்லை. அத்தகைய நிதி இல்லை என்று நான் கூறுகிறேன். முடிந்தால், அந்த நிதி இருப்பதைக் காட்டுமாறு நான் உங்களுக்கு சவால் விடுக்கிறேன். நான் ஒரு தனிநபர். கடந்த கால தவறுகளைப் பற்றி நிறைய பேச முடியும்.

ஆனால் எதிர்காலத்தில் இந்த தவறு நடக்க விடாதீர்கள். நாட்டின் சட்டங்களின்படி ஒரு சட்டப்பூர்வ நிதியாக இது இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.