Header Ads



யூடியூப் குறிப்பிட்ட மருந்துகளினால் ஏற்பட்ட விபரீதம்


மதுரை - மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த கலையரசி 19 வயது. உடல் எடையை குறைப்பது தொடர்பான ஆர்வம் காரணமாக கடந்த சில நாட்களாக யூடியூப்பில் வெளியாகும் பல வீடியோக்களை  பார்த்துள்ளார். யூடியூப்பில்  குறிப்புகளின் அடிப்படையில், மருந்து கடைக்கு சென்று, சில  மருந்துகளை வாங்கியுள்ளார். டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல், யூடியூப்பில் பார்த்த தகவல்களை மட்டும் நம்பி, அவர் அந்த மருந்துகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது.


மருந்தை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கலையரசிக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதனால் பெற்றோர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி  சிகிச்சை வழங்கி, உடல்நலம் சீராகிவிட்டதாக  வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


ஆனால், மறுநாளே ஜனவரி 18 ஆம் திகதி இரவு மீண்டும்  கடும் வாந்தி, மயக்கம், உடல்நலக்குறைவு ஏற்பட்டு, நிலை மோசமாக பெற்றோர் அவரை ராஜாஜி மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச்செல்ல வழியிலேயே கலையரசி உயிரிழந்துவிட்டார்.  


இந்த சம்பவம் குறித்து கலையரசியின் தந்தை வேல்முருகன் புகாரின் பேரில், பொலிஸார் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கலையரசி எந்த வகையான மருந்துகளை உட்கொண்டார், அவை உயிரிழப்பிற்கு காரணமாக இருந்ததா என கண்டறிய தகவல் சேகரித்து வருகின்றனர்.


இரவு நேரத்தில் கலையரசி தனக்கு அதிகமாக வயிறு வலிப்பதாகவும், வயிற்றுப் போக்கில் ரத்தம் வெளியேறி வருவதாக சொல்லி அப்பாவை கட்டிப்பிடித்து அழுதுள்ளார். அதற்கு பிறகுதான்  மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே மகளின் உயிர் பறிபோய்விட்டது.

No comments

Powered by Blogger.