70 ரூபாய் குடிநீர் போத்தலை, 100 ரூபாய்க்கு விற்பனை செய்தவருக்கு, 5 இலட்சம் ரூபாய் அபராதம்
70 ரூபாய் பெறுமதியான குடிநீர் போத்தலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்த குற்றத்திற்காக, கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதிவான் எச்.டி.டி.ஜே. பிரேமரத்ன உத்தரவிட்டார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைமை அலுவலக விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
70 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய 500 மில்லி லீற்றர் குடிநீர் போத்தல்கள் நான்கினை, தலா 90 ரூபாய் மற்றும் 100 ரூபாய் என அதிக விலைக்கு விற்றபோது அவர் கைதானார்.

Post a Comment